ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த 'லக்கி பாஸ்கர்'

தீபாவளி பண்டிகையன்று வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்துள்ளது.

Update: 2024-11-14 07:56 GMT

சென்னை,

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் 'லக்கி பாஸ்கர்'.

வெங்கி அட்லுரி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் தனுஷை வைத்து 'வாத்தி' படம் இயக்கியவர் ஆவார். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.

தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம், தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாகக் குறிவைத்து உருவானாலும் தமிழிலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இது குறித்து படக்குழுவினர் உற்சாகத்துடன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக துல்கர் சல்மான் நடிப்பில் ஒரே ஒரு படம் மட்டுமே வெளியான நிலையில் தற்போது 'லக்கி பாஸ்கர்' அவருக்கு மீண்டும் பழைய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்