ரஜினி இல்லை...அட்லீயின் அடுத்த படத்தில் இணையும் பிரபலங்கள்?
அட்லீயின் அடுத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.;
சென்னை,
'ராஜா ராணி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' என மூன்று பிளாக்பஸ்டர் படங்களையும் இயக்கினார். மக்கள் இப்படங்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அடுத்ததாக 2023-ம் ஆண்டு ஷாருக்கான் நடித்து வெளியான 'ஜவான்' படத்தை இயக்கினார். நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர்.
இந்திய சினிமாவில் மிக அதீக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் 5-வது இடத்தை ஜவான் பிடித்தது. இப்படம் 1,200 கோடி ரூபாய் வசூல் செய்தது. அடுத்ததாக இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால், இப்படத்தில் ரஜினி நடிக்கவில்லை என்றும் கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான் ஆகியோர் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள 'கல்கி 2898 ஏடி' படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.