திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்
நடிகை ஜான்வி கபூர் அவரது நண்பருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.;
பெங்களூரு,
மறைந்த பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'தேவரா' என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி இருக்கிறார். இதை அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்கிறார். இவர் ஆன்மிகத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவர். அதனால் அடிக்கடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்.
அதன்படி, இன்று நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் உள்ள பாலாஜி கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். ஜான்வி கபூரின் நண்பர் ஷிகர் பஹாரியா மற்றும் அவரது தாயார் ஸ்ம்ருதி பஹாரியாவும் அவருடன் சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.