'நமது முதல் சூப்பர் ஹீரோ' - சக்திமான்' பட டீசர் வெளியானது
'சக்திமான்' பட டீசரை முகேஷ் கன்னா வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 90-களில் பல எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்த தொடர் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார்.
இந்த தொடரின் வரவேற்பையடுத்து, சினிமா படமாக உருவாக்க இருப்பதாக சமீபத்தில் முகேஷ் கன்னா தெரிவித்திருந்தார். அதன்படி, ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் உருவாக இருப்பதாக கூறி இருந்தார்.
இதில், சக்திமானாக நடிப்பது யார் என்பதை இதுவரை தெரிவிக்காதநிலையில், இப்படத்தின் டீசரை முகேஷ் கன்னா தற்போது வெளியிட்டுள்ளார். அதனுடன் பகிர்ந்துள்ள பதிவில், 'நமது முதல் இந்திய சூப்பர் டீச்சர்- சூப்பர் ஹீரோ. ஆம் ! இன்றைய குழந்தைகள் மீது இருளும் தீமையும் மேலோங்கி வருவதால்...அவர் திரும்பி வரும் நேரம் இது' இவ்வாறு தெரிவித்துள்ளார்.