சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் அதிதி ராவ்?
அனில் ரவிபுடி, சிரஞ்சீவியை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.;

ஐதராபாத்,
பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் அனில் ரவிபுடி. இவரது இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியான படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தையடுத்து அனில் ரவிபுடி, சிரஞ்சீவியை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை ஷைன் ஸ்கிரீன்ஸ் சினிமாவின் சாஹு கரபதி தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை அதிதி ராவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிதி ராவ் தெலுங்கில் "சம்மோகனம்", "மகா சமுத்திரம்" போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.