'ஆர்.சி 16' - படக்குழு பகிர்ந்த முக்கிய அப்டேட்

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தநிலையில், தற்போது முடிவடைந்திருக்கிறது.;

Update:2025-03-26 09:07 IST
RC 16 Update

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தநிலையில், தற்போது முடிவடைந்திருக்கிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இப்படக்குழு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஒரு புயல் அதன் வருகையை அறிவிக்காது, ஆனால் அது தாக்கும்போது உலகம் கவனிக்கும்' என்று தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் விரைவில் இப்படத்தின் பெரிய அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

து.

Tags:    

மேலும் செய்திகள்