'இந்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறேன்' - நடிகை திவ்யா தத்தா
நடிகை திவ்யா தத்தா தற்போது 'சாவா' படத்தில் நடித்து வருகிறார்.;
மும்பை,
பாலிவுட் நடிகைகளில் ஒருவர் திவ்யா தத்தா. பஞ்சாபைச் சேர்ந்த இவர் ஏராளமான பஞ்சாபி படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 'பாக் மில்கா பாக்,' 'டெல்லி-6', 'வீர்-ஜாரா,' போன்ற படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் 'சர்மாஜி கி பேட்டி'. இப்படத்தை பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஸ்மான் குரானாவின் மனைவி தாகிரா காஷ்யப் இயக்கி இருந்தார். இது இவர் இயக்கும் முதல் பாலிவுட் படமாகும். இப்படத்தை தொடர்ந்து திவ்யா தத்தா, 'சாவா' படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, 47 வயதாகும் திவ்யா தத்தா, தன்னை பதற்றமடையச் செய்யும் பாத்திரங்களைத் தேர்வு செய்வதாக கூறுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "என்னை பதற்றமடையச் செய்யும் கதாபாத்திரங்களை மட்டுமே நான் ஏற்றுக்கொள்கிறேன், அதே சமயம், அந்த பாத்திரத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்றால் அதில் நடிக்க மாட்டேன்.
தற்போது ரசிகர்கள் என்னிடம், நான் ஒரு படத்தில் இருந்தால் அது நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்றார்.