ஹேமா கமிட்டி அறிக்கை - நடிகர் ரஜினிகாந்த் பதில்

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.;

Update:2024-09-01 15:54 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'வேட்டையன்' படம் அடுத்தமாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது. அதே நாளில்தான் சூர்யா நடிப்பில் உருவான 'கங்குவா' படமும் வெளியாக இருந்தது. ஆனால் சமீபத்தில் சூர்யா, கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார். இது பேசுபொருளானது.

ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமானநிலையம் வந்தார். விமான நிலையம் வந்த அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு அவர், சூர்யாவின் அன்புக்கும், பாசத்திற்கும் நன்றி, ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி எனக்கு தெரியாது. கூலி படப்பிடிப்பு நன்றாக போய்கொண்டிருக்கிறது. பார்முலா 4 கார் பந்தயம் வெற்றிபெற வாழ்த்துகள், இவ்வாறு கூறினார்.

நாட்டையே உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை கேரள அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து பல நடிகைகள், நடிகர்கள், டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்