அதற்காக எல்லோரையும் காக்கா பிடிக்க வேண்டும் - நடிகை ரிமி சென்
சினிமாவில் திறமை என்பது இரண்டாம் பட்சம்தான் என்று நடிகை ரிமி சென் கூறினார்.
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ரிமி சென். இவர் வெற்றி பெற்ற 'தூம்' படத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாகவும், சிரஞ்சீவி ஜோடியாக 'அந்தரிவாடு' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து இருந்தார்.
சினிமாவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை ரிமி சென் கூறியதாவது:-
சினிமாவில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை. மரக்கட்டை சும்மா வந்துபோவது மாதிரியான கேரக்டர்களே கொடுத்தனர். அக்சய்குமார் , அஜய்தேவ்கனுடன் இணைந்து நடித்தபோது சினிமா துறையில் யாருடனும் எனக்கு தொடர்பு இல்லை. உதவி கேட்டு யாரிடமும் கைநீட்டவும் இல்லை.
சினிமாவில் திறமை என்பது இரண்டாம் பட்சம்தான். நடிப்பு திறமைக்கு இங்கு மதிப்பு இல்லை. வாய்ப்புக்களுக்காக எல்லோரையும் காக்கா பிடிக்க வேண்டும். வாய்ப்பு கேட்க வேண்டும். அப்போதுதான் நிலைக்க முடியும். அப்படி செய்ய எனக்கு தெரியாது. நண்பராக இருந்த ஒருவர் என்னிடம் ரூ.4 கோடி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்து வழக்குப்பதிவும் செய்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் மும்பை ஐகோர்ட்டில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.