'கிளாடியேட்டர் 2' படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

கிளாடியேட்டர் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Update: 2024-11-14 01:26 GMT

சென்னை,

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. மேலும், இது ஐந்து ஆஸ்கர் விருதுகளையும் வென்றது.

கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்காட் தற்போது உருவாக்கியுள்ளார். இப்படத்தில், பால் மெஸ்கல், டென்சல் வாஷிங்டன், பெட்ரோ பாஸ்கல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படத்தின் 2 டிரெய்லர்கள் வெளியாகி வைரலாகின.

இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளநிலையில், படக்குழு இந்தியாவில் புரமோசன் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் இயக்குனர் ரிட்லி ஸ்காட் மற்றும் நடிகர் பால் மெஸ்கல் ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் பெற்றுள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே "சார், தி கோட், இந்தியன் 2" ஆகிய படங்களின் ரிலீஸ் உரிமையை பெற்று திரையரங்குகளில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Tags:    

மேலும் செய்திகள்