ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 7 படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் - தமிழ் நடிகர் என்பது தெரியுமா?

தமிழ் நடிகர் ஒருவர் நடித்த 7 படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டன.

Update: 2024-07-15 05:51 GMT

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். திரைப்படத் துறையில் அவரது பங்களிப்பு மிகவும் அதிகம். அவரது வாழ்க்கை முழுவதும் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அவர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், அவரது பல படங்கள் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் சில படங்களில் சிறிய வேடத்திலும் கமல் நடித்துள்ளார். அவ்வாறு இவர் நடித்த 5 தமிழ் படங்கள்,1 இந்தி படம் மற்றும் 1 தெலுங்கு படம் ஆகியவை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அதன்படி, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 7 படங்களில் நடித்த முதல் இந்திய மற்றும் தமிழ் நடிகர் என்ற பெருமையை கமல்ஹாசன் கொண்டுள்ளார்.

அந்த படங்களின் பட்டியல் பின்வருமாறு:-

1.நாயகன் (Nayakan)

இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, நாசர் நடிப்பில் இப்படம் வெளியானது.

2.தேவர்மகன் (Thevarmagan)

கடந்த 1992-ம் ஆண்டு பரதன் இயக்கி வெளியான இப்படத்தில் கமல்ஹாசன், சிவாஜி, நாசர், கவுதமி, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்தனர்.

3. குருதிப்புனல் (Kuruthipunal)

பி. சி. ஸ்ரீராம் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியானது இப்படம். கமல்ஹாசன், நாசர், கவுதமி, அர்ஜுன் நடிப்பில் இப்படம் உருவானது.

4.இந்தியன் (indian)

கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். இப்படத்தை ஷங்கர் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

5.ஹே ராம் (Hey Ram)

கமல்ஹாசன், ஷாருக்கான், வசுந்தரா தாஸ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு இப்படம் வெளியானது. தமிழ் மற்றும் இந்தியில் வெளியானது.

இவற்றுடன் இந்தி படமான சாகர் மற்றும் தெலுங்கு படமான ஸ்வாதி முத்யம் ஆகிய படங்களும் அடங்கும்.

Tags:    

மேலும் செய்திகள்