தனுஷின் 'ராயன்' படத்தின் 'ஓ ராயா' பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராயன்' படத்தின் 'ஓ ராயா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

Update: 2024-07-19 16:16 GMT

சென்னை,

நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், 'ராயன்' படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், புதிய போஸ்டர் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான 'அடங்காத அசுரன்' வெளியாகி தனுஷின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இந்த திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள 'ஓ ராயா' பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஏ.ஆர் ரகுமானுடன் கனவ்யா துரைசாமி ஆகியோர் இந்த பாடலை இணைந்து பாடியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்