'கோட்' படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் விரைவில் வெளியீடு - இயக்குநர் வெங்கட் பிரபு

'கோட்' படத்தின் நீக்கப்பட்ட ஒட்டுமொத்த காட்சிகளும் படத்தில் சேர்க்கப்பட்டு ஓ.டி.டி.யில் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.;

Update:2024-09-07 15:23 IST

சென்னை,

லியோவுக்குப் பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட் படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி 4,000 திரைகளில் வெளியானது.

இந்தப் படத்தில் பலர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்கள். அதில் ஒருவர் சிவகார்த்திகேயன். வளர்ந்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்து விஜய்யின் இடத்தைப் பிடிப்பார் என பலரும் கூறுகிறார்கள். இந்தக் கருத்தை கோட் படத்தில் உவமையாக வைத்து சில காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் இது குறித்து வெங்கட் பிரபு கூறியதாவது: 'விஜய்யின் பெருந்தன்மைதொடக்கத்தில் சில வசனங்கள் வேறு மாதிரி இருந்தன. ஆனால், விஜய் சார் கூடுதலாக 'இந்தாங்கா சிவா, இந்தத் துப்பாக்கியைப் பிடிங்க. நிறைய பேரோட உயிர் உங்ககைல இருக்கு..' என்று சொல்லுவார். துப்பாக்கி விஜய் சார் படம். இதைச் சொல்லுவதற்கு எவ்வளவு பெரிய மனசு வேண்டும். 'நீங்க இதைவிட எதோ முக்கியமான வேலையா போறீங்க. நீங்க அதை பார்த்துக்கோங்க. நான் இதை பார்த்துக்குறேன்' என விஜய்யிடம் சிவகார்த்திகேயன் சொல்லுவார்.

நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் காட்சிகள்சிவகார்த்திகேயன் மோகன் காட்சிகள் இருக்கின்றன. அது சுவாரசியமான காட்சிகள். ஆனால், படத்தின் நீளம் கருதி அது படத்தில் நீக்கப்பட்டன. விரைவில் நீக்கப்பட்ட காட்சிகளில் வெளியிடுவேன்' என்றார்.

மேலும் நீக்கப்பட்ட ஒட்டுமொத்த காட்சிகளும் படத்தில் சேர்க்கப்பட்டு ஓ.டி.டி.யில் வெளியாகும் எனவும் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்