3 வருடங்களாக இரண்டே படங்கள் - புதிய படங்களில் கையெழுத்திடாதது ஏன்? : பதிலளித்த நிதி அகர்வால்

3 ஆண்டுகளாக புதிய படங்களில் நிதி அகர்வால் கையெழுத்திடாமல் இருந்து வருகிறார்.;

Update:2025-02-04 08:51 IST
Contract is the reason for not signing new films: Nidhhi Agerwal

சென்னை,

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நிதி அகர்வால். இவர் தெலுங்கில் 'சவ்யசாச்சி' திரைப்படத்திலும், தமிழில் 'ஈஸ்வரன்' திரைப்படத்திலும் அறிமுகமானார்.

ஐஸ்மார்ட் ஷங்கர் மற்றும் கலக தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபாஸுடன் 'தி ராஜா சாப்' படத்திலும் , பவன் கல்யாணுடன் 'ஹரி ஹர வீரமல்லு' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கலக தலைவன் படத்திற்கு பிறகு 3 ஆண்டுகளாக இந்த 2 படங்களை தவிர வேறு எந்த புதிய படத்திலும் நிதி அகர்வால் கையெழுத்திடாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், புதிய படங்களில் கையெழுத்திடாதது ஏன்? என்ற கேள்விக்கு நிதி அகர்வால் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'ஹரி ஹர வீர மல்லு'படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நின்று போனது. அப்போது 'தி ராஜா சாப்' தயாரிப்பாளர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. 'தி ராஜா சாப்'படத்தில் கையெழுத்திட்டேன். இரண்டுமே பிரமாண்டமான படங்கள் என்பதால் எனக்கு வேறு படங்களுக்கு நேரமில்லை' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்