முதல் முறையாக 2 வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்?
அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.;
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா தி ரைஸ் மற்றும் புஷ்பா தி ரூல் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார். புஷ்பா தி ரைஸ் படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.
இப்போது அனைவரது பார்வையும் அவரது அடுத்த படத்தின் மீது உள்ளது. அதன்படி, அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. ஆனால், இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது அட்லியின் படம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றொரு நாயகனாக நடிப்பதாகவும், சிரஞ்சீவி, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அட்லீ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான தகவல்களுக்கு மத்தியில், அல்லு அர்ஜுன் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் மேலும் ஒரு தகவல் வெளியாகி வருகின்றது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அல்லு அர்ஜுன் 2 வேடங்களில் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து இருக்கிறது.