பிக்பாஸ் ரச்சிதா நடித்துள்ள'எக்ஸ்ட்ரீம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் ரச்சிதா நடித்துள்ள'எக்ஸ்ட்ரீம்' படம் வரும் ஜனவரி 3-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;

Update: 2024-12-31 12:37 GMT

சென்னை,

பிழை, தூவல் படங்களை இயக்கிய ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ள படம், 'எக்ஸ்ட்ரீம்'. இதில் பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா, ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், ராஜ்குமார், சிவம் உட்பட பலர் நடித்துள்ளனர். சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் தயாரித்துள்ளனர். ரச்சிதா மகாலட்சுமி , சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் 6-வது சீசன் மூலம் பிரபலமானவர்.

படம் பற்றி ராஜவேல் கிருஷ்ணா கூறும்போது, "எக்ஸ்ட்ரீம் என்றால் தீவிரம், அளவுக்கு அதிகம் என்று சொல்லுவோம். எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. அதை மீறும்போது நடக்கும் விளைவுதான் இந்தப் படத்தின் கதை. பெண்களுக்கான படம் இது. சில பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் செய்யும் சம்பவங்களால் பாதிக்கப்படுவதும் ஒரு பெண்தான், அதற்குத் தீர்வு சொல்வதும் ஒரு பெண்தான் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறோம். இந்தக் கருத்து பெண்களுக்கு எதிரானதாக இருப்பதாகக் கூறி பலர் நடிக்க மறுத்தனர். ஆனால் பெண் குழந்தைகளைப் பெற்ற அனைத்துப் பெற்றோர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள். அப்படியொரு கருத்தை இதில் சொல்கிறோம். நான் இயக்கிய 'தூவல்' படம், பல்வேறு பட விழாக்களில் 40 விருதுகளைப் பெற்றது. இங்கு மக்கள் ஆதரவு இருந்தும், திரையரங்குகள் தராதது மிகுந்த வருத்தமளித்தது. இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்." என்றார்.

இந்நிலையில் 'எக்ஸ்ட்ரீம்' படம் வரும் ஜனவரி 3-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்