'மிஷன்: இம்பாசிபிள் 8' செட்டில் டாம் குரூஸுடன் அவ்னீத் கவுர் - ஹாலிவுட்டில் அறிமுகமா?
'மிஷன்: இம்பாசிபிள் 8' செட்டில் டாம் குரூஸுடன் இருக்கும் புகைப்படத்தை பாலிவுட் நடிகை அவ்னீத் கவுர் வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். இவர் பைக் சாகசங்கள், ஓடும் ரயில் மீது அதிரடியாக சண்டையிடுதல், விமானத்தில் இருந்து குதித்து சண்டை போடுவது என்று ஆக்சன் பிரியர்களை ஆச்சரியப்படுத்தி உலகம் முழுவதும் ரசிகர்களை சேர்த்துள்ளார்
இவரது நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் மிஷன் இம்பாஸிபிள். இது பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியாகின. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது இதன் 8-ம் பாகத்தின் டீரெய்லர் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 'மிஷன்: இம்பாசிபிள் 8' செட்டில் டாம் குரூஸுடன் இருக்கும் புகைப்படத்தை இளம் பாலிவுட் நடிகை அவ்னீத் கவுர் வெளியிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் ஹாலிவுட்டில் அறிமுகமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அவ்வாறு அவ்னீத் கவுர் இப்படத்தில் நடிக்கும் பட்சத்தில் 'மிஷன்: இம்பாசிபிள்' தொடரில் நடிக்கும் 2-வது பாலிவுட் நட்சத்திரமாக அவ்னீத் கவுர் இருப்பார். இதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மிஷன்: இம்பாசிபிள் - கோஸ்ட் புரோட்டோகால் படத்தில் நடிகர் அனில் கபூர் நடித்திருந்தார்.