'ராஷ்மிகா மீதான எனது எண்ணத்தை 'அனிமல்' மாற்றியது' - பிரபல பாலிவுட் நடிகை
பிரபல பாலிவுட் நடிகை சஞ்சீதா ஷேக், ராஷ்மிகா மந்தனாவை பாராட்டியுள்ளார்.
சென்னை,
ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அனிமல் மற்றும் புஷ்பா 2 படத்தின் வெற்றி அவரது புகழை வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது என்றே சொல்லலாம். அது அவரை இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் மாற்றியுள்ளது
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை சஞ்சீதா ஷேக், ராஷ்மிகா மந்தனா மீதிருந்த தனது எண்ணத்தை 'அனிமல்' படம் மாற்றியதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'நான் கடைசியாகப் பார்த்த படம் புஷ்பா 2. அந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்ல நடிப்பை பார்ப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும். புஷ்பா 2 அல்லு அர்ஜுன் படம், ஆனால் ராஷ்மிகா தனித்து நின்று தனது முத்திரையைப் பதித்திருந்தார். அது பாராட்டத்தக்கது.
நான் ராஷ்மிகாவை அதிகமாக சமூக ஊடகங்களில்தான் பார்த்தேன். அப்போது அவர் மீது எனக்கு இருந்த எண்ணம் அவர் நடித்த 'அனிமல்' படத்திற்கு பிறகு மாறியது. அனிமல் படத்தில் அவர் மிகவும் நல்லவராகவும் அழகாகவும் இருந்தார். அதில் ரன்பீருடன் அவர் நடித்த ஒரு காட்சி அவரைப் பற்றிய எனது எண்ணம் மாறி சிறந்த நடிகை என்ற பிரிவில் வந்தார். புஷ்பா 2-ல் அவர் மீதான மரியாதை இன்னும் அதிகரித்தது' என்றார்.
நடிகை சஞ்சீதா ஷேக், கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான 'ஹீரமண்டி' வெப் தொடரில் வஹீதாவாக நடித்திருந்தார்.