'சூர்யாவின் சனிக்கிழமை' வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவின் வரிசையில் உள்ள படங்கள்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;

Update: 2024-08-31 05:53 GMT

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. சமீபத்தில் இவர் வில்லனாக நடித்து வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று எஸ்.ஜே.சூர்யாவின் வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இதன் மூலம் அவரது புகழ் மேலும் அதிகரித்திருக்கிறது.

இதனையடுத்து, எஸ்.ஜே சூர்யாவின் வரிசையில் உள்ள படங்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதன்படி, எஸ்.ஜே.சூர்யா தற்போது, தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் 'கேம்சேஞ்சர்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படம் இறுதிக்கட்ட பணியில் உள்ளது.

முன்னதாக இயக்குனர் ஷங்கரும், எஸ்.ஜே.சூர்யாவும் இந்தியன் 2 படத்தில் பணியாற்றி இருந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்தியன் 3 படத்திலும் எஸ்.ஜே.சூர்யா பணியாற்றுகிறார். இந்தியன் 2-ல், எஸ்.ஜே.சூர்யாவை அதிக நேரம் திரையில் காண முடியவில்லை, ஆனால் மூன்றாம் பாகத்தில் அதிக நேரம் வருவார் என்று கூறப்படுகிறது.

மேலும் எஸ்.ஜே. சூர்யா, பிரதீப் ரங்கநாதனுடன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', விக்ரமுடன் 'வீர தீர சூரன்' மற்றும் கார்த்தியுடன் 'சர்தார் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்