இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதி ஆட்டத்தை நேரில் கண்டுகளித்த சிம்பு
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதி ஆட்டத்தை நடிகர் சிம்பு நேரில் கண்டுகளித்தார்.;

துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்து. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 48.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்களை எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், துபாயில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தை நடிகர் சிம்பு நேரில் கண்டுகளித்தார். அரையிறுதி ஆட்டத்தை சிம்பு கண்டுகளிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிம்புவின் ரசிகர்கள் அந்த வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.