ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'சிக்கந்தர்' படப்பிடிப்பு பணி நிறைவு
ஏ.ஆர்.முருகதாஸ் இயத்தில் சல்மான்கான் நடித்துவரும் 'சிக்கந்தர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.;

மும்பை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மதராஸி' எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
மேலும், பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கி வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். இதன் மூலம் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார். மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நாடு முழுவதும் பல இடங்களில் 90 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு, நேற்று இரவுடன் படப்பிடிப்பு பணி நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற உள்ளன.
