ஆலியா பட் நடித்த ஜிக்ராவின் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி குறித்து மனம் திறந்த நடிகர்

பாக்ஸ் ஆபிஸ் தோல்வி குறித்து நடிகர் வேதாங் ரெய்னா மனம் திறந்து பேசியுள்ளார்;

Update: 2025-01-01 02:58 GMT

மும்பை,

ஜோயா அக்தர் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓ.டி.டியில் வெளியான படம் 'தி ஆர்ச்சீஸ்'. இப்படத்தின் மூலம் இளம் நடிகர் வேதாங் ரெய்னா சினிமாவில் அறிமுகமானார் . இதனைத்தொடர்ந்து இவர் 'ஜிக்ரா' படத்தில் ஆலியா பட்டுடன் நடித்தார். சகோதர பாசத்தை காட்டும் கதையாக இப்படம் உருவாகி இருந்தது.

இப்படத்தில், நடிகை ஆலியா பட்டிற்கு சகோதரராக வேதாங் ரெய்னா நடித்தார். கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இப்பட தோல்வி குறித்து நடிகர் வேதாங் ரெய்னா மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"ஒரு நடிகராக, நீங்கள் ஒரு படத்திற்கு 1 வருடத்தை கழிக்கிறீர்கள் என்றால், அப்படத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று விரும்புவீர்கள். அதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். ஒருவேளை அது எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றால், நீங்கள் உங்களுக்குள்ளேயே இதைவிட என்ன சிறப்பாக செய்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்புவீர்கள். இது நமக்கு அதிலிருந்து விடுபட உதவும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்