திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நடிகர் பாலா நிதியுதவி

திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நடிகர் பாலா நிதியுதவி வழங்கினார்.

Update: 2024-12-08 14:43 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் அண்ணாமலையார் மலையில் வ.உ.சி. நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் பயங்கர சத்தத்துடன் உருண்டு கீழ்நோக்கி வந்தன. பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து வ.உ.சி.நகரில் உள்ள வீடுகள் மீது சரிந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்திற்கு தொலைக்காட்சி நடிகர் கே.பி.ஒய். பாலா நேரில் சென்றார். அங்கு மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், பாதிக்கப்பட்ட 4 குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 2.5 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கினார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்