கேரள திரைப்பட விருது: 9 விருதுகளை அள்ளிய 'ஆடுஜீவிதம்'
சிறந்த நடிகர் உள்பட 9 விருதுகளை ஆடுஜீவிதம் பெற்றுள்ளது.;
சென்னை,
மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இயக்குனர் பிளஸ்சி இயக்கிய இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்தார். அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியானது.
நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் ரூ. 159 கோடிக்கு மேல் வசூலித்தது. அதனைத்தொடர்ந்து, இப்படம் பல விருதுகளை வெல்லும் என்று பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், அதன்படி பல விருதுகளை அள்ளியுள்ளது. இந்த ஆண்டுக்கான 54வது கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், பிருத்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் 9 விருதுகளை அள்ளியுள்ளது.
1. சிறந்த நடிகர் - பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்)
2. சிறந்த திரைக்கதை - பிளஸ்சி (ஆடுஜீவிதம்)
3. சிறந்த ஒளிப்பதிவு - சுனில் கே.எஸ் (ஆடுஜீவிதம்)
4. சிறந்த ஒலி கலவை - ரசூல் பூக்குட்டி, சரத் மோகன் (ஆடுஜீவிதம்)
5. சிறந்த ஒப்பனை - ரஞ்சித் அம்பாடி (ஆடுஜீவிதம்)
6. சிறந்த இயக்குனர் - பிளஸ்சி (ஆடுஜீவிதம்)
உள்பட 9 விருதுகளை ஆடுஜீவிதம் பெற்றுள்ளது.