சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.;

Update:2024-08-14 11:49 IST

சென்னை,

ஆபரண தங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ. 55 ஆயிரத்தை கடந்தது. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே, 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி குறைக்கப்பட்டது.

இதனால், தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அந்த வகையில் நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 51,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேவேளை, நேற்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 52,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து 52,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கம் கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து 6,555 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்