தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கிய நிதியுடன் சேர்த்து கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.