லாரி டிரைவர்களின் போராட்டத்தால் வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவினாலும், தமிழ்நாட்டில் தட்டுப்பாடு வராது என பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் முரளி உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார்.