தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-09 02:30 GMT

சென்னை,

சென்னை, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி என்.ஐ.ஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான சோதனை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்த வழக்கு தொடர்பாக சோதனை என என்.ஐ.ஏ அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. என்.ஐ.ஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்