ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத்தின் உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மல்யுத்த பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது.