ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.ஆன் லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 3 மாத சிறை அல்லது ரூ 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டையாக வழங்கப்படும். சூதாட்டத்தை நடத்துபவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.