ஆனி மாத ராசி பலன்கள் 16-06-2023 முதல் 16-07-2023 வரை
நண்பர்களால் நல்வாழ்வு அமையும் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. முதல் சுற்றா? இரண்டாவது சுற்றா? மூன்றாவது சுற்றா? என்பதை பொறுத்துப் பலன்கள் நடைபெறும். மேலும் ஆனி 12-ந் தேதி சனி வக்ரம் பெறுவதால், அதன் பிறகு நற்பலன்கள் படிப்படியாக வந்துசேரும். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் இருந்த தடைகள் அகலும். தேவைக்கேற்ற பணம் தேடி வரும்.
மிதுன - புதன்
ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது, ரோக ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கடன்சுமை ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. தன்னம்பிக்கை குறையும். தடைகளைத் தாண்டி முன்னேற வழிபாடுகள் உங்களுக்கு கைகொடுக்கும்.
சிம்ம - செவ்வாய்
ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 4, 11-க்கு அதிபதியானவர். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். பூர்வீக சொத்துகளில் பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் இணக்கம் குறையும். முன்னேற்றப் பாதையில் சறுக்கல் ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
சிம்ம - சுக்ரன்
ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு விருப்பப்பட்ட இடத்திற்கு மாறுதல் அடைவர். கடன் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது பதிவதால் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன் கூடிய வாய்ப்புகள் வரலாம். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாங்கிய சொத்துக்களால் லாபம் உண்டு.
கடக - புதன்
ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சி கைகூடும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். செய்தொழிலில் புதிய பணியாளர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். தேசப்பற்று மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வெற்றி நடைபோடும். வாசல் தேடி வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் தாமதமாகக் கிடைக்கும். கலைஞர்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம். மாணவ-மாணவிகள் மிகுந்த கவனத்தோடு படித்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பிறருக்கு பணப்பொறுப்பு சொல்வதை பெண்கள் தவிர்ப்பது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 16, 26, 27, 30, ஜூலை: 1, 2, 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தாநீலம்.