மகரம் - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்

Update: 2023-10-17 18:45 GMT

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை

வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனியும், அர்த்தாஷ்டம குருவும் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார்கள். அஷ்டமாதிபதி சூரியன் நீச்சம் பெற்றுவிட்டார். எனவே நன்மையும் தீமையும் கலந்தே நடைபெறும் மாதமிது. ராசிநாதன் வக்ரம் பெறுவதால் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். ஆயினும் ஆகாரக் கட்டுப்பாட்டின் மூலம் அதை சரிசெய்து கொண்டு செயல்படுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் இம்மாதம் உங்களுக்குத் துணையாக இருக்கும்.

சனி வக்ர நிவர்த்தி!

ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு அதிபதி வக்ர நிவர்த்தியாவது யோகம் தான். எனவே உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரியும் சூழ்நிலை ஏற்படும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையக்கூடிய நேரமிது. பொன், பொருள் சேர்க்கை, பூமி யோகம் போன்றவைகள் உண்டு. அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அரைகுறையாக நின்ற பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெறும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் நேரமிது. உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவர்.

குரு வக்ரம்!

மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டம குருவாக விளங்குபவர் இப்பொழுது வக்ரம் பெற்றுச் சஞ்சரிப்பது யோகம் தான். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும். கண்ணியமிக்க நண்பர்களின் சேர்க்கையால் கடமையைச் சரிவரச் செய்வீர்கள். விரயங்கள் அதிகரித்தாலும் அதற்குரிய வரவு உண்டு. வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.

நீச்சம் பெறும் சுக்ரன்!

ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளால் சில பிரச்சினைகளும், விரயங்களும் ஏற்படும். தொழில் கூட்டாளிகள் இணக்கமாக நடந்து கொள்ளமாட்டார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். மனப்பயம் அதிகரிக்கும்.

விருச்சிக புதன்!

ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

பொது வாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வரலாம். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்குப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். வாங்கல்-கொடுக்கல்களில் சரள நிலை ஏற்படும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கை கூடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 20, 21, 22, 27, 28, நவம்பர் 1, 2, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.

மேலும் செய்திகள்