இன்றைய ராசிபலன் - 10.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்;

Update:2024-09-10 06:31 IST

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 25ம்- தேதி செவ்வாய்க்கிழமை

நட்சத்திரம் : இன்று மாலை 05.13 வரை அனுஷம் பின்பு கேட்டை

திதி : இன்று மாலை 07.10 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 7.45 - 8.45

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் மாலை : 03.00 - 04.30

எமகண்டம் காலை : 09.00 - 10.30

குளிகை மாலை : 12.00 - 1.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 7.30 - 8.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம் : ரேவதி, அஷ்வினி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

ரேவதி, அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

குடும்ப வருமானத்தை மிகுதிப்படுத்த பகுதி நேர வேலைக்குச் செல்வீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை நிகழும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திருமணமாகாத பெண்களுக்கு பொருத்தம் நல்லபடியாக அமையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

திருமணமானவர்களுக்கு வெளிநாட்டில் தாங்கள் முயற்சி செய்த வேலை கிடைக்கும். தம்பதிகளிடையே சமரசம் ஏற்படும். பிள்ளைகளைப் பற்றிய மனவருத்தம் நீங்கும். ஆடம்பர செலவினை குறைப்பது நல்லது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

கடகம்

காதலர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். இளைஞர்கள் தேவையற்ற வீண் ஆடம்பர செலவை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரிகளுக்கு வரவேண்டிய ஒரு தொகை வந்து சேரும். குடும்பத் தலைவிகள் எண்ணம் ஈடேறும். மாணவர்களின் நினைவுத்திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்

குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் வீட்டில் மதிப்பு அதிகரிக்கும். வேலையில்லாத பெண்களுக்கு வேலை கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதியர்களுக்கு நல்ல வரன் உண்டாகும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் நல்ல லாபத்தை காண்பீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கன்னி

மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருகுவர். மாணவர்கள் பலமுறை படித்தால்தான் நினைவுக்கு வரும். மிகவும் கவனம் தேவை. பண விஷயத்தில் சிக்கனம் தேவை. பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை கொள்வது நல்லது. வெளியூர் பயணம் செய்வீர்கள். சர்க்கரை நோயாளிகள் உணவு விசயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

துலாம்

தம்பதிகளிடையே வாக்குவாதம் வந்து போகும். சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் பயனடைவர். திருமணத்திற்காக தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு தங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி அடையும். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

விருச்சிகம்

உறவினர்கள் வருகை உண்டு. அவர்களால் நன்மை உண்டு. கூட்டு வியாபாரிகளுதிகக்கு லாபம் அதிகரிக்கும். பிள்ளை தங்களுக்கு பிடித்த கல்வி நிறுவனங்களில் மேல்படிப்பு படிக்க இன்றிலிருந்தே முயற்சி செய்வீர்கள். அதற்குண்டான நுழைவுத் தேர்வுக்கான பாடத்தை படிக்க துவங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

தனுசு

திருமணவயதில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கான சுப காரிய பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். திருமணத் தகவல் மையத்தில் பதிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்கள் இணையதளம் மூலம் ஆர்டர்கள் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மகரம்

வியாபாரிகள் வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து, அதில் அதிகமான லாபத்தை பெறுவர். வீட்டிற்குத் தேவையான நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு தங்களுடைய விருப்பப்படி வரன் அமையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். கலைஞர்களின் கனவு பூர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கும்பம்

உத்யோகஸ்தர்கள் விட்டுப்போன சில வேலையை முடிப்பீர்கள். குடும்பத் தலைவிகள் நகை சீட்டு அல்லது உண்டியலில் சேமிப்பது என்ற விசயத்தில் ஈடுபடுவர். தங்கள் பிள்ளைகளின் கல்விக் கடனில் ஒரு பகுதியை அடைத்துவிடுவீர்கள். உடல் குளிர்ச்சி அடையும். ஆதலால், ஐஸ்க்ரீம், கூல்டிரிங்ஸ் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மீனம்

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. மற்ற நட்சத்திரக்காரர்களுக்கு பிரச்சினை இல்லை. கூட்டுத் தொழிலாளிகள் தங்கள் கூட்டு முயற்சியின் பேரில் அதிக லாபத்தை அடைவீர்கள். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். அன்புத் தொல்லைக் கொடுத்த தங்கள் பிள்ளைகளுக்காக குடும்பத்துடன் பொழுது போக்கு இடங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

Tags:    

மேலும் செய்திகள்