பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றில் சீன வீராங்கனை ஜெங் கின்வென் தோல்வி

மாதவிடாய் வலியால் பிரெஞ்ச் ஓபனை தவறவிட்ட சீன வீராங்கனை ஜெங் கின்வென் "ஆணாக பிறந்திருக்கலாம்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-31 11:19 GMT

பிரெஞ்ச் ஓபன் தொடரின் 4-வது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்விடெக்கிற்கு எதிராக தரவரிசையில் 74-வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை ஜெங் கின்வென் மோதினார். முதல் செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெங் கின்வென், 2வது செட் துவங்கும் முன் அவருக்கு மாதவிடாய் காரணமாக வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட சில நிமிடங்கள் மருத்துவ ஓய்வு எடுத்துக் கொண்டார். வலியுடன் ஆடிய அவர் தோல்வி அடைந்து வெளியேறினார்.

அதன்பிறகு பேசிய ஜெங் கின்வென், "என்னால் டென்னிஸ் விளையாட இயலவில்லை. வலி மிகவும் வேதனையாக இருந்தது. ஆடுகளத்தில் நான் ஒரு ஆணாக இருக்க விரும்புகிறேன், ஆனால் அந்த நேரத்தில் என்னால் முடியாது. நான் ஆணாக இருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. வலி இல்லாவிட்டால், இன்னும் சிறப்பாக ஓடவும், கடினமாக அடிக்கவும் முடியும் என்று நினைக்கிறேன்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்