விம்பிள்டன் டென்னிஸ்: எலினா ரைபகினா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-07-02 15:39 GMT

image courtesy: AFP 

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, ரோமானியாவின் எலெனா-கேப்ரியலா ரூஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட எலினா ரைபகினா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரோமானியாவின் எலெனா-கேப்ரியலா ரூஸை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்