அமெரிக்க ஓபன் டென்னிஸ்: லோரென்சோ முசெட்டி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

முசெட்டி 2-வது சுற்று ஆட்டத்தில் மியோமிர் கெக்மனோவிக் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Update: 2024-08-27 14:22 GMT

image courtesy: AFP

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்கள் நோவக் ஜோகோவிச் (ஆண்கள் ஒற்றையர்), கோகோ காப் (பெண்கள் ஒற்றையர்) உள்பட பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, அமெரிக்க வீரரான ரெய்லி ஓபெல்கா உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

தொடக்கம் முதலே இரு வீரர்களும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் முதல் இரு செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது மற்றும் 4-வது செட்டை முசெட்டி கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் முசெட்டி 7-6, 1-6, 6-1 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளார்.

இவர் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் மியோமிர் கெக்மனோவிக் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்