அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் - .மால்டோவா வீரர் ரடு ஆல்பட் ஆகியோர் மோதினர்.
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் - .மால்டோவா வீரர் ரடு ஆல்பட் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச்6-2,6-2,6-4என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.