அமெரிக்க ஓபன் டென்னிஸ்: டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

டிமிட்ரோவ் காலிறுதியில் பிரான்சிஸ் டியாபோ உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Update: 2024-09-03 01:15 GMT

image courtesy: AFP

நியூயார்க்,

ஆண்டின் இறுதி 'கிராண்ட்ஸ்லாம்'ஆன அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) உடன் மோதினார்.

இதில் முதல் இரு செட்டுகளை டிமிட்ரோவ் கைப்பற்ற அடுத்து இரு செட்டுகளை ரூப்லெவ் கைப்பற்றினார். இதனால் கடைசி செட் பரபரப்புக்குள்ளானது. அந்த செட்டை டிமிட்ரோவ் கைப்பற்றி வெற்றி பெற்றார். 3 மணி நேரம் 39 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் டிமிட்ரோவ் 6-3, 7-6 , 1-6, 3-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் காலிறுதியில் பிரான்சிஸ் டியாபோ உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்