அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் கோகோ காப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

கோகோ காப் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறார்.

Update: 2024-08-30 01:28 GMT

image courtesy: AFP

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கோகோ காப் (அமெரிக்கா), தட்ஜனா மரியா (ஜெர்மனி) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-4 மற்றும் 6-0 என்ற நேர்செட்டில் தட்ஜனா மரியாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

அவர் அடுத்த ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்