அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ரஷியா, பெலாரஸ் வீரர்கள் பங்கேற்க அனுமதி..!!

கடந்த முறை அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

Update: 2022-06-15 13:59 GMT

Image Courtesy : AFP 

நியூயார்க்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 100-வது நாளை கடந்து நடைபெற்று வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக பல நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. அதை தொடர்ந்து பல நாடுகளின் விளையாட்டு கூட்டமைப்புகளும் ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

குறிப்பாக டென்னிஸ் அரங்கில் புகழ்பெற்ற விம்பிள்டன் தொடரில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.

அதை தொடர்ந்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் கடந்த முறை அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற ரஷியாவின் டேனில் மெட்வதேவ் மீண்டும் ஒருமுறை தனது பட்டத்தை தக்கவைத்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்