அரக்கோணம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அன்னமையா (வயது 60). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரக்கோணம் அருகே மிட்டபாளையத்தில் நடந்த கோவில் திருவிழா நாடகத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார். பின்னர் அவர் காணாமல் போய் விட்டார். அவர் வீடு திரும்பாததால் பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து அன்னமையாவின் மகன் கோபி அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்னமையாவை தேடி வருகின்றனர்.