டெல் அவிவ் ஓபன் டென்னிஸ் தொடர் - கால் இறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

டெல் அவிவ் ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதி சுற்றுக்கு முன்னனி வீரர் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

Update: 2022-09-30 11:12 GMT

டெல் அவிவ்,

டெல் அவிவ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவைச் சேர்ந்த முன்னனி வீரர் நோவக் ஜோகோவிச் உடன் ஸ்பெயின் வீரர் பாப்லோ அன்டுஜார் மோதினார்.

போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் கனடா வீரர் வாசெக் பாஸ்பிசில் உடன் ஜோகோவிச் மோத உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்