போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் வாகன தணிக்கை

தூத்துக்குடியில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் வாகன தணிக்கை நடத்தினார்.

Update: 2023-05-09 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று மாலையில் திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அவர் தூத்துக்குடி குரூஸ் பர்னானந்து சிலை சந்திப்பு, பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில், ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரோந்து சென்று போலீசார் மேற்கொண்டு வரும் ரோந்து பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். அப்போது வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு பொதுமக்களுக்கும் மோட்டார் வாகன விதிகளை பின்பற்ற அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது, மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சதீஷ்குமார், தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்