ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மார்டா கோஸ்ட்யுக்

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-21 02:37 GMT

Image Courtesy: AFP 

ஸ்டட்கார்ட்,

முன்னணி வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக் செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரோசோவாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட மார்டா கோஸ்ட்யுக் 7-6 (6-2), 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரோசோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மார்டா கோஸ்ட்யுக் முன்னணி வீராங்கனையான ரைபகினாவை (கஜகஸ்தான்) எதிர்கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்