ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; அல்காரஸ், சின்னெர் காலிறுதிக்கு முன்னேற்றம்

நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் சின்னெர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் உடன் மோத உள்ளார்.

Update: 2024-10-09 11:04 GMT

image courtesy: AFP

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு ஆட்டத்தில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), பிரான்சின் கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.

இந்தப்போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் கெயில் மான்பில்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அல்காரஸ், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோத உள்ளார்.

இதே பிரிவில் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார். இந்தப்போட்டியில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னெர் 6-4, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் சின்னெர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் உடன் மோத உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்