பெண்கள் டென்னிசில் இந்தியாவுக்கு எதிர்காலம் எப்படி உள்ளது? - சானியா பதில்

ஒற்றையர் உலக தரவரிசையில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 245-வது இடத்தில் உள்ளார்.

Update: 2023-02-22 19:48 GMT

துபாய்,

துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்சுடன் இணைந்து களம் இறங்கிய இந்திய வீராங்கனை சானியா மிர்சா நேற்று முன்தினம் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். இத்துடன் தனது 20 ஆண்டு கால டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.

இரட்டையர் பிரிவில் 'நம்பர் ஒன்' இடம், 6 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்று சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை புகழின் உச்சிக்கு சானியா கொண்டு சென்றார். ஆனால் அவருக்கு பிறகு இந்தியாவில் பெரிய அளவில் வீராங்கனைகள் உருவாகவில்லை. ஒற்றையர் உலக தரவரிசையில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 245-வது இடத்திலும், கர்மன் தண்டி 265-வது இடத்திலும் உள்ளனர்.

பெண்கள் டென்னிசில் இந்தியாவின் எதிர்காலம் குறித்து 36 வயதான சானியாவிடம் கேட்ட போது 'சர்வதேச டென்னிசில் உயரிய அளவில் இந்திய வீராங்கனைகளில் யாராவது ஆதிக்கம் செலுத்துவதை பார்க்க முடியுமா என்று கேட்டால், அடுத்த 5-10 ஆண்டுகளில் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. இது தான் உண்மை நிலைமை' என்று பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்