பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடி தோல்வி
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடி தோல்வியடைந்தது.
பாரீஸ்,
பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரரான மேத்யூ எப்டன் ஜோடி, சாண்டியாகோ கோன்சாலஸ் (மெக்சிகோ)-எட்வர்ட் ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) ஜோடியுடன் மோதியது.
இந்த போட்டியில் கோன்சாலஸ்-ரோஜர் வாசெலின் ஜோடி 6-2, 5-7, 10-7 என்ற செட் கணக்கில் போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.