நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ஜெசிகா பெகுலா
கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.;
டொரண்டோ,
கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சகநாட்டவரான அமண்டா அனிசிமோவாவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ஜெசிகா பெகுலாவும், 2வது செட்டை 6-2 என்ற கணக்கில் அமண்டா அனிசிமோவாவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா பெகுலா, 6-1 என்ற கணக்கில் அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தினார்.
இறுதியில் ஜெசிகா பெகுலா 6-3, 2-6, 6-1 என்ற கணக்கில் அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.