மான்டி கார்லோ டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஜோரன் விலீஜென் இணை சாம்பியன்
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்தது.;
மொனாக்கோ,
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெல்ஜிய ஜோடியான ஜோரன் விலீஜென் - சாண்டர் கில்லே இணை ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரெவ் பிரேசிலின் மார்செலோ மெலோ இணையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ஸ்வேரெவ் இணை 2வது செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி செட்டில் அபாரமாக ஆடிய ஜோரன் விலீஜென் இணை 10-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
இறுதியில் இந்த ஆட்டத்தில் ஜோரன் விலீஜென் - சாண்டர் கில்லே இணை 5-7, 6-3, 10-5 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்வேரெவ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.