மியாமி ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
மியாமி,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் கனடாவின் கேப்ரியல் டியாலோவை தோற்கடித்த இந்திய வீரர் சுமித் நாகல், தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் நேற்று கோல்மேன் வோங்கை (ஹாங்காங்) சந்தித்தார்.
இதில் நாகல் 6-3, 1-6, 5-7 என்ற செட்கணக்கில் தோற்று வெளியேறினார்.